மீண்டும் விளையாட்டு படத்தை கையில் எடுக்கும் அருண் ராஜா காமராஜ் | ஹிந்தி நடிகர் சதீஷ் ஷா காலமானார் | தனுஷ் தம்பியாக நடிக்க வேண்டியது : விஷ்ணு விஷால் | பிரபாஸ் படத்தில் இணைந்த இளம் நடிகை | ரஜினிகாந்த் எடுத்த புது முடிவு? | எனக்கு ஆர்வம் இல்லை : லியோ படப்பிடிப்பில் மகன் நடிகரிடம் திரிஷா சொன்ன வார்த்தை | பவர்புல்லான சவுண்ட் ஸ்டோரி : விவேக் ஓபராய் | கார் மோதி 3 பேர் விபத்தில் சிக்கிய விவகாரம் : விளக்கம் கூறி சர்ச்சையில் சிக்கிய நடிகை | அரசு மருத்துவமனை பின்னணியில் உருவாகும் 'பல்ஸ்' | ஆள் கடத்தல் வழக்கை ரத்து செய்ய லட்சுமி மேனன் மனுதாக்கல் |

வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், சூரி, பவானிஸ்ரீ, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்து கடந்த வாரம் தமிழில் வெளியான படம் 'விடுதலை'. இப்படத்தைத் தெலுங்கிலும் டப்பிங் செய்து ஏப்ரல் 15ம் தேதியன்று வெளியிட உள்ளார்கள்.
இதன் தெலுங்கு டிரைலர் நேற்று காலை யூ டியூபில் வெளியிடப்பட்டது. வெளியான 24 மணி நேரத்தில் இந்த டிரைலர் ஒரு மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தெலுங்கு சினிமா ரசிகர்கள் சூரி நடித்திருக்கும் படத்தை இதற்கு முன் பார்த்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் வெற்றிமாறன், இளையராஜா, விஜய் சேதுபதி என அவர்கள் அறிந்திருப்பார்கள். அந்த நம்பிக்கையில் அவர்கள் இந்த டிரைலரைப் பார்த்திருக்க வாய்ப்புண்டு.
தமிழ் ரசிகர்களுக்குத்தான் அவர் இதற்கு முன்பு காமெடி நடிகர். படத்தைப் பார்த்த பின் சூரியை அவர்கள் கதாநாயகனாக மட்டுமே பார்ப்பார்கள் என சொல்ல முடியும். இதைப் போன்ற கதைகள் தெலுங்கு ரசிகர்களுக்கு அதிகம் தெரிந்த ஒன்றுதான். எனவே, அவர்களை இப்படம் கவரும் என எதிர்பார்க்கலாம்.