‛ஸ்பிரிட்' படத்தை துவங்கி வைத்த சிரஞ்சீவி! | அம்மாவை அவமானப்படுத்தியதால் பென்ஸ் கார் வாங்கிய மிருணாள் தாக்கூர்! | பிரதீப் ரங்கநாதனின் ‛எல்ஐகே' படத்தின் செகண்ட் சிங்கிள் எப்போது? | ஜூனியர் என்டிஆரை வைத்து பான் இந்திய படம் இயக்கும் ரிஷப் ஷெட்டி! | 10 கிலோ வெயிட் குறைத்தது எப்படி? கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட தகவல் | காதல் தோல்வி ரோல் ஏன்: தனுஷ் கேள்வி | மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பிரபுதேவா! | ரஜினி பிறந்தநாளில் ‛ஜெயிலர் 2' சர்ப்ரைஸ்! | மகத் ராகவேந்திரா, ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடிக்கும் புதிய படம்! | இசை பல்கலைக்கழகத்தில் பாடகி மாலதி லக்ஷ்மனுக்கு முக்கிய பொறுப்பு |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில் கடந்த வருடம் வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல் பாகத்தில் பாடல்கள் ரசிக்க வைத்தாலும், மிகப் பெரும் வரவேற்பைப் பெறவில்லை என்பதே உண்மை. பழைய இசைக் கருவிகளைப் பயன்படுத்தியதாக ஏஆர் ரஹ்மான் சொல்லியிருந்தாலும் சில பாடல்கள் படத்துடன் ஒட்டவில்லை என்ற கருத்தே அதிகமாக இருந்தது. ஆனாலும், படத்தில் கொஞ்சமாக இடம் பெற்ற 'அலை கடலாய்' பாடல் அதிகமான ரசிகர்களைக் கவர்ந்திருந்தது.
இந்நிலையில் இம்மாதம் வெளியாக உள்ள 'பொன்னியின் செல்வன்' இரண்டாம் பாகத்திற்கான பாடல்கள் 'ஸ்லோ பாய்சன்' ஆக ரசிகர்கள் மனதில் நுழைந்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த முதல் சிங்கிளான 'அக நக' லிரிக் வீடியோ சக்திஸ்ரீ கோபாலனின் இனிமையான குரலில் ரசிகர்களை வசீகரப்படுத்தியது. அப்பாடல் கார்த்தி, த்ரிஷா இடையிலான காதல் பாடலாக அமைந்தது.
அடுத்து நேற்று 'வீரா ராஜ வீர' லிரிக் வீடியோ வெளியாகியது. இப்பாடலை சங்கர் மகாதேவன், சித்ரா, ஹரிணி ஆகியோர் பாடியுள்ளனர். இப்பாடல் ஜெயம் ரவி, சோபிதா துலிபலா இடையிலான காதல் பாடலாக உள்ளது. இரண்டு பாடல்களையும் பைந்தமிழ் வரிகளுடன் இளங்கோ கிருஷ்ணன் எழுதியுள்ளார்.
இந்தப் பாடல்களைக் கேட்கும் போதுதான் படத்திற்கேயுரிய 'சரித்திர டச்'சை உணர முடிகிறது.




