9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? | சர்வர் வேலை சாதாரணமானது இல்லை : இயக்குனர் கே.பாக்யராஜ் சொன்ன கதை | நயன்தாரா பிறந்தநாளுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசளித்த விக்னேஷ் சிவன் | பிளாஷ்பேக்: நட்பின் ஆழம் பேசிய “எங்கள் தங்கம்” படப் பாடல்கள் | இப்போதே புரமோஷனை ஆரம்பித்த 'வாரணாசி' படக்குழு | 'எல்ஐகே' : விக்னேஷ் சிவன் எடுத்த அதிரடி முடிவு | இழந்த வெற்றியை 'மாஸ்க்'கில் மீட்பாரா கவின் ? | தெலுங்கு ரீ என்ட்ரிக்காக காத்திருக்கும் பிந்து மாதவி | தமிழுக்கு வரும் துளு நடிகை |

நடிகர் நானி நடிப்பில் உருவாகி கடந்த வாரத்தில் வெளியான திரைப்படம் தசரா. ஸ்ரீ காந்த் ஒதலா இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர்கள் சமுத்திரக்கனி, சாய் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். விமர்சகர்களிடம் கலவையான விமர்சனம் பெற்றாலும் ரசிகர்கள் நல்ல வரவேற்பைப் கொடுத்துள்ளனர். தொடர்ந்து படம் வெளியான நாள் முதல் நல்ல வசூலை கொடுத்து வரும் இப்படம் உலகம் முழுவதும் முதல் ஐந்து நாட்களில் ரூ. 92 கோடி வசூல் பெற்றுள்ளது என அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் அறிவித்துள்ளனர். ஓரிரு நாளில் ரூ.100 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.