ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை காஜல் அகர்வால். திருமணம் ஆகி ஒரு குழந்தை பிறந்த பின்னரும் சினிமாவில் நடித்து வரும் காஜல் தற்போது ‛இந்தியன் 2' திரைப்படத்தில் கமலுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில் அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியது, ‛‛ஹிந்தி தான் எனது தாய்மொழி. ஹிந்தி திரைப்படங்களை தான் பார்த்து வளர்ந்தேன். ஆனால் தென்னிந்திய சினிமாவில் இருக்கும் அறம், ஒழுக்கம், மதிப்பு, ஹிந்தி திரையுலகில் குறைவு என்றே கருதுகிறேன். அதனால் தான் ஹிந்தியை விட்டுவிட்டு தென்னிந்திய சினிமாவில் நடிக்க விரும்புகிறேன். ஏராளமானவர்கள், தங்கள் திரை வாழ்க்கையை ஹிந்தியில் இருந்து தொடங்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கான காரணம் உலகளவில் மிகப் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என்பதால் தான். இங்கு சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள் இருக்கிறார்கள். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளிலும் தனித்துவமான திரைப்படங்கள் வருகின்றன.” என கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.