'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் |
ஸ்ரீகாந்த் ஓடலா இயக்கத்தில் நடிகர் நானி நடிப்பில் உருவாகி மார்ச் 30ல் திரைக்கு வந்த திரைப்படம் தசரா. இதில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். எஸ்.எல்.வி சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தெலுங்கு மட்டுமல்லாது தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் இந்தப்படம் வெளியாகி உள்ளது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தபோதிலும் தெலுங்கில் இப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல்நாளிலேயே 38 கோடி வசூலை குவித்த இந்தப்படம் இரண்டு நாளில் உலகம் முழுக்க ரூ.53 கோடிக்கும் அதிகமாக வசூலித்து இருப்பதாக படக்குழுவினரே அதிகாரப்பூர்வமாக போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.