சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
யசோதா படத்திற்கு பிறகு எதிர்பாராத விதமாக மயோசிடிஸ் எனும் தசைநார் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா, அதற்காக கிட்டத்தட்ட மூன்று மாதம் சிகிச்சை எடுத்துக்கொண்டு, படப்பிடிப்பில் கலந்து கொள்வதிலிருந்து ஓய்வெடுத்து வந்தார் அதைத்தொடர்ந்து கடந்த மாத துவக்கத்தில் விஜய் தேவரகொண்டாவுடன் தெலுங்கில் இணைந்து நடித்து வரும் குஷி படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல இயக்குனர் சிவா நிர்வானா இயக்குகிறார். ஹேசம் அப்துல் வகாப் இசையமைக்கிறார்.
தனது நடிப்பில் அடுத்ததாக வரும் ஏப்ரல் 14ல் வெளியாக இருக்கும் சாகுந்தலம் திரைப்படத்திற்காக கடந்த சில நாட்களாக புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வந்தார் சமந்தா. இதை தொடர்ந்து தற்போது குஷி படத்தின் படப்பிடிப்பு மீண்டும் கேரளாவில் உள்ள ஆலப்பியில் துவங்கியுள்ளது. இது குறித்த வீடியோ ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார் சமந்தா. ஜெயராம் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படம் செப்டம்பர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது..