புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... | ஹீரோயினாக நடிக்கும் அஸ்மிதா | 23ம் தேதி வெளியாகிறது 'கேரளா கிரைம் பைல்ஸ்' | மைசூரில் ஜாலியாக ஊர் சுற்றும் ராம் பொத்தனேனி, ஸ்ரீலீலா | மம்முட்டி கிடைக்காததால் பசுபதியை நடிக்க வைத்தேன்: 'தண்டட்டி' இயக்குனர் சொல்கிறார் | பல கோடிக்கு பைக்குகள் வாங்கிய அஜித்? |
தெலுங்கு நடிகர் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள தசரா படம் நேற்று வெளியானது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியான இப்படம் முதல் நாளில் 30 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் நாயகியான கீர்த்தி சுரேஷுக்கு நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், என் அன்பு தங்கச்சி கீர்த்தி சுரேஷ், நானி, ஸ்ரீகாந்த் ஒடேலா மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருந்தார்.
இந்நிலையில் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி கதையின் நாயகனாக நடித்துள்ள விடுதலை படம் இன்று திரைக்கு வந்திருப்பதை அடுத்து கீர்த்தி சுரேஸும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், என் அன்பு அண்ணனின் விடுதலை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற உங்கள் அன்பு தங்கையின் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருக்கிறார்.