அரசியல் படத்தில் அபர்ணதி | ஒரே நேரத்தில் தயாராகும் 2 ஐயப்பன் படங்கள் | 'கேரளா ஸ்டோரி 2' படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம் | இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் |

மாஸ்டர் படத்தை அடுத்து விஜய் நடிப்பில் லியோ படத்தை இயக்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இதில் விஜய்யுடன் சஞ்சய் தத், அர்ஜுன், கவுதம் மேனன், மிஷ்கின், திரிஷா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்க அனிருத் இசை அமைக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் அடுத்தபடியாக சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் தயாரிப்பாளர் லலித் குமார் கலந்து கொண்டார். அப்போது விஜய்யின் லியோ படம் குறித்த அப்டேட் அவரிடம் கேட்கப்பட்டது. அதற்கு, ‛‛விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி லியோ படத்தின் அடுத்த அப்டேட் வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார். விஜய் நடித்த மாஸ்டர் படத்தை அடுத்து தற்போது லியோ படத்தையும் லலித் குமார் தான் தயாரித்து வருகிறார்.