ஆர்த்தி ரவியின் பதிவுக்கு கெனிஷா பதிலடி | மேடம் டுசாட் மியூசியத்தில் மெழுகுச் சிலையுடன் போஸ் கொடுத்த ராம்சரண் | தயாரிப்பாளர் சர்ச்சை முடிந்து சமரசம் : படப்பிடிப்புக்கு திரும்பிய நிவின்பாலி | தேங்காய் பன்னுக்காக அலைந்த எனக்கு சிவப்பு கம்பள வரவேற்பு : கண் கலங்கிய சூரி | சூர்யா மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் : கார்த்திக் சுப்பராஜ் பதில் | ரஜினி பெயரும் 'தேவா', தனுஷ் பெயரும் 'தேவா' !! | தமிழ்த் தலைப்புகளை தவிர்க்கும் தமிழ்த் திரையுலகம் | ட்ரைன் : முழு கதையையும் இப்படி சொல்லிட்டீங்களே மிஷ்கின் | விஷால் திடீரென மயங்கியது ஏன்...? | கவலையில் கஜானா படக்குழு : ரிலீஸான படத்தை தள்ளி வைத்தது |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஷாரூக்கான். கடந்த சில வருடங்களாக தொய்வில் இருந்த பாலிவுட்டை தன்னுடைய 'பதான்' படம் மூலம் தூக்கி நிறுத்தியவர். அந்தப் படம் 1000 கோடி வசூலைக் கடந்து மிகப் பெரிய வெற்றிப் படமாகியது.
கார்கள் மீது அதிக ஆசை கொண்ட ஷாரூக்கான் 'பதான்' வெற்றிக்காக 10 கோடி ரூபாய் செலவில் புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியுள்ளது. 0555 என்ற பேன்சி நம்பருடன் கூடிய வெள்ளை நிறக் காரை அவர் வாங்கியுள்ளார். அவரே இந்தக் காரை மும்பையில் இரவு நேரங்களில் ஓட்டிக் கொண்டு சென்றதாகச் சொல்கிறார்கள்.
ஷாரூக்கானிடம் ஏற்கெனவே பான்டம் டிராப்ஹெட் கூப், லேன்ட் ரேவர் ரேஞ்ச் ஸ்போர்ட், பிஎம்டபிள்யு ஐ8 எலக்ட்ரிக், டொயாட்டோ லான்ட் குரூய்சர், மிட்சுபிஷி பஜேரோ, பிஎம்டபிள்யு 6, ஹுண்டாய் சான்ட்ரோ, க்ரீட்டா ஆகிய கார்கள் இருக்கிறதாம். இப்போது புதிதாக ரோல்ஸ் ராய்ஸ் காரும் இணைந்துள்ளது.
ஹிருத்திக் ரோஷன், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட ஒரு சிலர் மட்டுமே பாலிவுட்டில் ரோல்ஸ் ராய்ஸ் காரை வைத்திருக்கிறார்கள்.