'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
பாலிவுட் நடிகையான ஆலியா பட் கடந்த வருடம் ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண் ஜூனியர் என்டிஆர் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் குறைந்த காட்சிகளே நடித்திருந்தாலும், ராம்சரணுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும் கூட, ஜூனியர் என்டிஆருடன் தான் அவர் இணைந்து நடிக்கும் காட்சிகள் அதிகமாக இருந்தன. அந்த வகையில் படப்பிடிப்பின்போது ஜூனியர் என்டிஆருடன் நட்பாக பழகினார்.
இந்த நிலையில் தற்போது ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்காக ஆஸ்கர் விருது கிடைத்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ளும் விதமாக ஜூனியர் என்டிஆரின் குழந்தைகளான அபய் மற்றும் பார்கவா இருவருக்கும் தன்னுடைய சொந்த பிராண்ட் நிறுவனத்திலிருந்து அழகான ஆடைகளை பரிசாக அனுப்பி வைத்துள்ளார் ஆலியா பட்.
இந்த உடைகளை அணிந்து கொண்ட தன்னுடைய குழந்தைகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ள ஜூனியர் என்டிஆர், ஆலியா பட்டுக்கு நன்றி தெரிவித்துள்ளதுடன் தன் பெயரிலும் இதேபோன்று ஒரே பரிசு ஆலியா பட்டிடம் இருந்து எப்போது வரும் என எதிர்பார்ப்பதாகவும் தனது ஆசையை வெளிப்படுத்தி உள்ளார்.