பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

கீர்த்தி சுரேஷ் நடிப்பில் அடுத்ததாக தெலுங்கில் வெளியாக இருக்கும் படம் தசரா. நானி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை ஸ்ரீகாந்த் ஒத்தெல்லா இயக்கியுள்ளார். இந்த படம் கேஜிஎப் பாணியில் நிலக்கரி சுரங்க பின்னணியில் நடைபெறும் கதையாக உருவாக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 30 ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் கீர்த்தி சுரேஷ்.
அந்த வகையில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, “மகாநதி படத்தில் நடித்தபோது ஏற்பட்ட ஒரு அதிர்வு, எனக்கு இந்த படத்தில் நடிக்கும்போது மீண்டும் ஏற்பட்டது. இந்த படத்தில் தெலுங்கானாவை சேர்ந்த பெண்ணாக நடித்துள்ளேன். படத்தில் வித்தியாசமாக தெலுங்கு பாஷை பேச வேண்டி இருந்தது. இதற்காக எனக்கு ஆரம்பத்திலேயே தெலுங்கு பேராசிரியர் ஒருவரும் துணை இயக்குனர் ஒருவரும் பேசுவதற்கு பயிற்சி அளித்தார்கள். அதனால் இந்த படத்தில் என்னுடைய காட்சிகளுக்கான டப்பிங்கை ஆறு நாட்களிலேயே முடித்து விட்டேன். வழக்கமாக என்னுடைய படங்களுக்கு இதை விட இன்னும் மூன்று நாட்கள் அதிகமாக தான் ஆகும்” என்று கூறியுள்ளார் கீர்த்தி சுரேஷ்.




