சூர்யா பட இயக்குனருடன் இணையும் விஜய் தேவரகொண்டா | எந்த நிலையிலும் உமக்கு மரணமில்லை : கண்ணதாசனை புகழ்ந்த கமல் | நான் ஒரு கிளீன் ஸ்லேட் : மமிதா பைஜு | ‛அரசன்' புரொமோ பயராக உள்ளது : அனிருத்திற்கு சிம்பு பாராட்டு | ‛ரெட்ட தல' படத்தின் கதைக்கரு இதுதான் : இயக்குனர் தகவல் | ஹீரோ அவதாரம் எடுக்கும் தேவி ஸ்ரீ பிரசாந்த் | கேரளா திரைப்பட விநியோகஸ்தர் சங்கத்திற்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் | ஒரு டஜன் வாழைப்பழம் மட்டும் சம்பளமாக பெற்றுக்கொண்டு நடித்த கோவிந்தா | பெண் குற்றச்சாட்டை தொடர்ந்து உதவி இயக்குனர் மீது காவல்துறையில் புகார் அளித்த துல்கர் சல்மான் நிறுவனம் | பாகுபலி : தி எபிக் ரன்னிங் டைம் சென்சார் சான்றிதழ் வெளியானது |
கடந்த 2021ல் மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தலைவி என்கிற படம் வெளியானது. இயக்குனர் விஜய் இயக்கியிருந்த இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கனா ரணவத் நடித்திருந்தார். எம்ஜிஆர் கதாபாத்திரத்தில் அரவிந்த்சாமி நடித்திருந்தார். இந்த படம் உருவாகி வந்த சமயத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. ஆனால் படம் ரிலீஸ் ஆனபோது அந்த எதிர்பார்ப்பை ஈடு செய்ய தவறியதுடன் மிகப்பெரிய நஷ்டத்தையும் சந்தித்ததாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் அந்த படத்தை இந்திய அளவில் விநியோகம் செய்ய உரிமை பெற்ற ஜீ நிறுவனம் அதற்கான முன்தொகையாக 6 கோடி ரூபாயை தயாரிப்பாளர்கள் வசம் செலுத்தி இருந்தனர். படம் எதிர்பார்த்த அளவில் வசூலாகாத நிலையில், கணக்கு வழக்குகளை ஒப்படைத்து தாங்கள் செலுத்திய ஆறு கோடி ரூபாயை திருப்பித் தருமாறு கடந்த ஒன்றரை வருடங்களாக கடிதம் மூலமாகவு,ம் மெயில் மூலமாகவும் சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டு வந்தனராம். ஆனால் அவர்கள் தரப்பிலிருந்து இதற்கு எந்த பதிலும் வராததால் தற்போது இது தொடர்பாக நீதிமன்றத்தை நாட இருப்பதாக தற்போது ஒரு பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.