ஜேசன் சஞ்சய், சந்தீப் கிஷன் பட ரிலீஸ் எப்போது? | எங்களை பிரித்தது அந்த மூன்றாவது நபரே : கெனிஷாவை சாடும் ஆர்த்தி ரவி | ஹிந்தி பட ரீமேக்கில் நடிக்கும் துருவ் விக்ரம் | சந்தானத்தை பின்னுக்கு தள்ளிய சூரி | அமெரிக்காவில் தெலுங்கு கலாச்சார விழாவில் பங்கேற்கும் அல்லு அர்ஜுன் | ''எல்லாமே முதன்முறை... பிகினியும் கூட...'': 'வார் 2' பற்றி கியாரா அத்வானி | மணிரத்னம் படத்தில் ருக்மணி வசந்த் | ஆதி படத்தில் இணையும் மிஷ்கின்? | மே 23ம் தேதியிலும் அதிகப் படங்கள் ரிலீஸ் | வழக்கமான கதாபாத்திரங்களில் நடிக்க விரும்பவில்லை : பிக்பாஸ் அர்ச்சனா |
நடிகர் தனுஷ் இப்போது இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் கேப்டன் மில்லர் படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். பீரியட் படமாக உருவாகும் இந்தப்படம் பிரமாண்டமாய் உருவாகிறது. இதையடுத்து தனது 50-வது படத்தை தனுஷே இயக்கி, நடிக்கவுள்ளார். அந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இதுதவிர மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதுதவிர தெலுங்கிலும் இரண்டு படங்களில் அவர் நடிக்க வேண்டி உள்ளது. இதற்கான அறிவிப்பும் ஏற்கனவே வெளியாகின.
இந்நிலையில் மற்றுமொரு புதிய படத்தை ஒப்பந்தம் செய்துள்ளாராம் தனுஷ். இந்த படத்தை சமீபத்தில் வெளியான கட்டா குஸ்தி படத்தின் இயக்குனர் செல்லா அய்யாவு இயக்க உள்ளார். கோபுரம் பிலிம்ஸ் அன்பு செழியன் இப்படத்தை தயாரிக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது.