மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா | ஹேமா கமிஷன் அறிக்கையை விட அதிர்ச்சி தருவதாக இருந்தது ; மோகன்லால் குறித்து ஸ்வேதா மேனன் | நினைத்ததை முடிப்பவன், கருப்பன், மகான் - ஞாயிறு திரைப்படங்கள் | மோகன்லாலின் ஹிருதயபூர்வம் படத்துக்கு யு சான்றிதழ் | ‛காஞ்சனா 4' படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் என்னை தேடுவார்கள் : நோரா பதேஹி | ‛கஜினி' சிக்ஸ்பேக்கிற்கு அஜித் தான் காரணம் : ஏ.ஆர்.முருகதாஸ் தகவல் |
கல்கி எழுதிய சரித்திர நாவலான பொன்னியின் செல்வன் அதேபெயரில் படமாகி, கடந்தாண்டு முதல்பாகம் வெளியானது. மணிரத்னம் இயக்கிய இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ரூ.500 கோடி வசூல் சாதனை புரிந்த இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்., 28ல் திரைக்கு வருகிறது. தற்போது அதற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. புரொமோஷன் பணிகள் துவங்கி உள்ளன.
முதற்கட்டமாக ‛அக நக' என்ற முதல் பாடலை இன்று மார்ச் 20ல், மாலை வெளியிட்டனர். இளங்கோ கிருஷ்ணன் இந்த பாடலை எழுத, சக்திஸ்ரீ கோபாலன் பாடி உள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே பொன்னியின் செல்வன் முதல்பாகத்தில் இந்த பாடலின் தொகுப்பு வெளியானது. தற்போதை அதையே முழுநீள பாடலாக வெளியிட்டுள்ளனர். அழகிய தமிழ் சொற்கள் கொண்டு எழுதப்பட்டுள்ள இந்த பாடல் வந்தியவன் கார்த்தி - குந்தவை திரிஷா இடையேயான காதலை வெளிப்படுத்தும் பாடலாக வெளியாகி உள்ளது. பாடல் வெளியான 45 நிமிடங்களில் 3.15 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்தன. தமிழ் தவிர்த்து தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இந்த பாடல் தனித்தனியாக வெளியிடப்பட்டுள்ளது.