ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நயன்தாரா நடிப்பில் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் வெளியான படம் 'கனெக்ட்' படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. என்றாலும் மிக குறைந்த பட்ஜெட்டில் தயாரான இந்த படம் லாபத்தை ஈட்டியது. தற்போது நயன்தாரா ஷாருக்கானுடன் ஜவான் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் நயன்தாரா நேரடியாக பாலிவுட்டில் நாயகியாக அறிமுகமாகிறார்.
தொடர்ந்து ஜெயம் ரவியுடன் இணைந்து 'இறைவன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். 'தனிஒருவன்' இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார். இந்நிலையில் நயன்தாராவின் 75வது படத்தின் பணிகள் பூஜையுடன் தொடங்கி உள்ளது. இந்த படத்தை நாட் ஸ்டூடியோஸ், ஜீ ஸ்டூடியோஸ், டிரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
புதுமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ள இந்தப் படத்தில், ஜெய், சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். படத்தை குறுகிய காலத்தில் தயாரித்து இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள். ஜெய் மற்றும் சத்யராஜுடன் ஏற்கனவே நயன்தாரா 'ராஜா ராணி' படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.