‛நரிவேட்டை' முதல் ‛8 வசந்தலு' வரை... ஓடிடியில் இந்தவார வரவு என்னென்ன...? | பெரிய பட்ஜெட்டில் 3டி அனிமேஷனில் தயாராகும் பெருமாளின் அவதாரங்கள் | வெப் தொடரில் நாயகன் ஆன சரவணன் | 'ஜென்ம நட்சத்திரம்' படத்தில் அதிர்ச்சி அளிக்கும் கிளைமாக்ஸ் | 3 மொழிகளில் தயாராகும் 'ஏழுமலை' | 'ஜானகி' பெயரை மாற்ற தயாரிப்பாளர் ஒப்புதல் | பிளாஷ்பேக்: பொன்விழா ஆண்டில் மது அம்பாட் | பிளாஷ்பேக்: சினிமாவில் ஹீரோவான பிறகும் நாடகத்தில் நடித்த எம்ஜிஆர் | 'ப்ரீடம்' வெளியீடு தள்ளி வைப்பு : நாளை ரிலீஸ் ? | தனுஷ் 54 படப்பிடிப்பு, பூஜையுடன் ஆரம்பம் |
அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் நடித்துள்ள படம் 'அயோத்தி'. இந்தப் படத்தில் பாலிவுட் நடிகர் யஷ்பால் சர்மா, அறிமுக நடிகை பிரீத்தி அஸ்ரானி, புகழ், போஸ் வெங்கட், பாண்டி ரவி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். என்.ஆர்.ரகுநந்தன் இசையமைத்திருந்தார்.
கடந்த 3ம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம் 3 வாரங்களைக் கடந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் மீடியாக்களின் சரியான விமர்சனம், மற்றும் பிரபலங்களின் பாராட்டுகளால் சுதாகரித்துக் கொண்டது. தற்போது படம் பெரிய வரவேற்பை பெற்றிருப்பதுடன், நல்ல விலைக்கு ஓடிடி தளத்திற்கு பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ரீமேக் உரிமங்களும் விற்கப்பட்டு வருகிறது.
படத்தின் வெற்றியை படக்குழுவினர் எளிமையாக கேக் வெட்டி கொண்டாடினார்கள். தொடர்ந்து படத்தின் இயக்குநர் மந்திரமூர்த்தி மற்றும் படத்தின் தயாரிப்பாளர் ரவீந்திரன் ஆகியோருக்கு நடிகர் சசிகுமார் தங்க செயினை அணிவித்து மகிழ்ந்தார்.