தொடர்ந்து குத்து பாடல் வாய்ப்பு - மறுக்கும் தமன்னா | உண்மையிலேயே பஹத் பாசிலுக்கு தான் அந்த தைரியம் உண்டு : நடிகை ஊர்வசி புகழாரம் | கமலுக்கான கதையை மோகன்லால் - மம்முட்டி படத்திற்கு பயன்படுத்தவில்லை : இயக்குனர் விளக்கம் | மூன்றாவது முறையாக ஜோடி சேரும் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | பெஞ்சல் புயல் : ரூ.10 லட்சம் நிவாரண நிதி வழங்கிய சிவகார்த்திகேயன் | சூர்யா 45வது பட படப்பிடிப்பில் இணைந்தார் த்ரிஷா | இயக்குனர் அவதாரம் எடுக்கும் சந்தானம் | 'ஒரு பெண் போல சண்டை செய்' - சமந்தாவின் பதிவு யாருக்காக? | தமிழகத்தில் ஒரு கோடி பேர் பார்த்த 'அமரன்' | புஷ்பா 2 பட குழுவுக்கு நன்றி தெரிவித்த சாம் சி.எஸ் |
இயக்குனர் ஆர் கண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, ஊர்வசி, கருணாகரன், ஷிவாங்கி, புகழ், தலைவாசல் விஜய், மனோபாலா, விடிவி கணேஷ் உட்பட பலர் நடித்துள்ள 'காசே தான் கடவுளடா' திரைப்படம் கடந்த ஆண்டு ரிலீசுக்கு தயாரான நிலையில் தியேட்டர்களில் வெளியிடக் கூடாது என அந்த படத்திற்காக கடன் கொடுத்த ஒருவர் வழக்கு தொடர்ந்தார். இதனால், பணத்தை திருப்பி கொடுக்காமல் 'காசே தான் கடவுளடா' படத்தை வெளியிட மாட்டோம் என தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் இந்த படத்திற்கான அனைத்து பிரச்னைகளும் தற்போது முடிவடைந்ததை அடுத்து ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 'காசே தான் கடவுளடா' திரைப்படம் மார்ச் 24ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.
கடந்த 1972ம் ஆண்டு ஏவிஎம் நிறுவனம் தயாரிப்பில் முத்துராமன், எம்ஆர்ஆர் வாசு, தேங்காய் சீனிவாசன், ஸ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி உள்ளிட்டோர் நடித்த 'காசே தான் கடவுளடா' படத்தின் ரீமேக் தான் இந்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.