'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
நடிகர் ரஜினிகாந்த் தற்போது நெல்சன் இயக்கத்தில் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். அவருடன் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சிவராஜ் குமார், சிறப்பு வேடத்தில் மோகன்லால், யோகி பாபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. சற்று ஓய்வில் உள்ள ரஜினி தற்போது மும்பையில் முகாமிட்டுள்ளார். நேற்று இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய முதல்ஒருநாள் கிரிக்கெட் போட்டியை நேரில் சென்று ரசித்தார்.
இந்நிலையில் மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவை மும்பையில் உள்ள அவரது இல்லத்தில் ரஜினி சந்தித்து பேசி உள்ளார். இது தொடர்பான போட்டோவை ஆதித்யா தாக்கரே தனது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இருவரின் இந்த திடீர் சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தினாலும் இது மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே, இருவரும் அரசியல் பற்றி எதுவும் பேசவில்லை என்கிறார்கள்.