பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் | பிளாஷ்பேக் : முதல் படத்திலேயே நீக்கப்பட்ட எஸ்.எஸ்.ராஜேந்திரன் காட்சிகள் | பிக் பாஸ் தெலுங்கு : தொகுப்பாளராகத் தொடரும் நாகார்ஜுனா | 'கேம் சேஞ்ஜர்' தோல்விக்குப் பிறகான விரிசல் |
ஜெயம் ரவி நடித்த 'பூலோகம்' படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் இயக்கிய 'அகிலன்' கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ஜெயம் ரவி மற்றும் ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். படம் வெளியாகி 20 நாட்களில் ஓடிடியில் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது வருகிற 31ம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாகிறது.
அகிலன் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்ததை தொடர்ந்து தியேட்டர் வசூல் கணிசமாக குறைந்தது. இதன் காரணமாக படத்தை ஓடிடி தளத்தில் வெளியிடுகிறார்கள். இதேபோன்று கடந்த மாதம் சந்தீப் கிஷன் நடித்த 'மைக்கேல்' படத்தை குறைந்த கால அளவில் ஓடிடியில் வெளியிட்டதால் அதற்கு தியேட்டர் அதிபர்கள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தில் ஜெயம் ரவி கேங்ஸ்டராகவும், பிரியா பவானி சங்கர் போலீஸ் அதிகாரியாகவும் நடித்துள்ளனர். இப்படத்தில் தன்யா ரவிச்சந்திரன் மற்றும் ஹரிஷ் உத்தமன் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். படத்தின் இசையை சாம் சிஎஸ் அமைத்துள்ளார்.