ஆர்ஆர்ஆர் பட காட்சிகளை இயக்க பாலிவுட் இயக்குனரை அழைத்த ராம்சரண் | தம்பியின் அறிமுக படத்திற்கு எதிராக களம் இறங்கிய ராணா | பிரேமம் வாய்ப்பு கைநழுவிப்போய் பஹத் பாசில் படம் மூலம் வெளிச்சத்திற்கு வந்த அஞ்சனா ஜெயபிரகாஷ் | பஸ் விபத்தில் சிக்கிய புஷ்பா 2 படக்குழு | மரகதமணியின் பாராட்டு மழையில் நனைந்த ஜஸ்டின் பிரபாகரன் | சமந்தா வெளியிட்ட தல கீழ் புகைப்படத்துக்கு 9 லட்சத்துக்கு அதிகமான லைக்குகள் | ‛ரெஜினா' பட விழா : மேடையில் பாட்டுபாடி, நடனமாடி அசத்திய சுனைனா | மார்கழி திங்கள் படப்பிடிப்பில் விபத்து: தப்பிய லைட்மேன்! | அனுஷ்கா படத்திற்காக தனுஷ் பாடிய பாடல் வெளியீடு | வயதாவது, கடினமானது… 'லிங்கா' பட நாயகி சோனாக்ஷி சின்ஹா |
'ஜெயம்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி கடந்த 20 வருடங்களில் தனக்கென ஒரு தனி ரசிகர் கூட்டத்தை வைத்திருப்பவர் ஜெயம் ரவி. கடந்த வருடம் அவர் நடித்து வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படத்தில் தலைப்பின் நாயகனாக நடித்து பலரது பாராட்டுக்களைப் பெற்றார்.
அவர் தனி கதாநாயகனாக நடித்துள்ள 'அகிலன்' படம் இந்த வாரம் மார்ச் 10ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கு முன்பு அவர் தனி கதாநாயகனாக நடித்த 'பூமி' படம் 2021ல் ஓடிடி தளத்தில் வெளியானது. அதற்கு முன்பு 2019ல் அவர் நடித்து வெளிவந்த 'கோமாளி' படம் பெரும் வெற்றியைப் பெற்றது. மூன்றரை வருட இடைவெளிக்குப் பிறகு ஜெயம் ரவியின் தனி கதாநாயகன் படமாக 'அகிலன்' வர உள்ளது.
ஜெயம் ரவி நடித்து 2015ல் வெளிவந்த 'பூலோகம்' படத்தை இயக்கிய கல்யாண கிருஷ்ணன் இயக்கியுள்ள படம்தான் 'அகிலன்'. இந்தப் படத்தின் டிரைலருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. வேறு எந்த முன்னணி நடிகரின் படமும் போட்டிக்கு இல்லாததால் 'அகிலன்' படம் சிறப்பாக இருக்கும்பட்சத்தில் அனைவரையும் கவர வாய்ப்புண்டு.
மார்ச் 10ம் தேதி “ப்யூட்டி, இரும்பன், கொன்றால் பாவம், மெமரீஸ்” ஆகிய படங்களும் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.