அஜித்தின் 'டாப் வசூல்' படமாக மாறுமா 'குட் பேட் அக்லி' | நடிகர் நானிக்கு ஓடிடி-யில் அடித்த ஜாக்பாட் | குபேரா : தெலுங்குக்கே முன்னுரிமை? | மகனுக்காக திருப்பதியில் முடி காணிக்கை செலுத்தி அன்னதானம் செய்த பவன் கல்யாண் மனைவி | 6 மாதத்தில் 15 கிலோ எடை குறைத்த ரஜிஷா விஜயன் | குஞ்சாக்கோ போபன் - பாவனா எதிர்பாராத சந்திப்பு | ஹிந்தி படத்தில் கரீனா கபூருக்கு ஜோடியாக இணைந்த பிரித்விராஜ் | இயக்குனர் எஸ்.எஸ்.ஸ்டான்லி காலமானார் | ஒரே நாளில் 3 படங்கள் ; மூன்றிலும் வீணடிக்கப்பட்ட வில்லன் நடிகர் | ஹரிஷ் கல்யாண் 15வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் லியோ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரிலீஸ் தேதியை முன்கூட்டியே அறிவித்து விட்டதாலோ என்னவோ படப்பிடிப்பை திட்டமிட்டபடி தடங்கல் இல்லாமல் நடத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று முடிந்தது. ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு தற்போது அதே காஷ்மீர் பகுதியில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கடந்த சில நாட்களாக இந்த இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார்.
இந்த நிலையில் தற்போது காஷ்மீரில் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்ததாக சென்னையில் நடைபெறும் அடுத்தக்கட்ட படப்பிடிப்பில் சஞ்சய் தத் கலந்து கொள்ள இருக்கிறார். கன்னடத்தில் வெளியான கேஜிஎப் சாப்டர் 2 படம் மூலமாக தென்னிந்திய சினிமாவில் முதன் முதலாக வில்லனாக அடி எடுத்து வைத்த நடிகர் சஞ்சய் தத்திற்கு தென்னிந்திய ரசிகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அதை தொடர்ந்து தற்போது லியோ படத்தில் விஜய்க்கு வில்லனாக சஞ்சய் தத் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.