துல்கர் சல்மானின் 41வது படத்தை துவக்கி வைத்த நானி | விமல் நடிக்கும் புதிய படம் ‛வடம்' | விருதே வாழ்த்திய தருணம் : ஹரிஷ் கல்யாண் நெகிழ்ச்சி | 100 கோடியை தாண்டிய 'மகாஅவதார் நரசிம்மா'; 100 கோடியை தொடுமா 'தலைவன் தலைவி'? | 5 ஆண்டுகளை நிறைவு செய்த தமிழ்த் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் | மீண்டும் வெளியாகிறது 'ஊமை விழிகள்' | பாடகர் ஆனார் புகழ் | வெப் தொடரில் நடிக்கும் சைத்ரா ரெட்டி | அயோத்திக்கு விருது ஏனில்லை? கோலிவுட்டில் வெடிக்கும் பஞ்சாயத்து | பிளாஷ்பேக் : மதன்பாப், சினிமாவில் காமெடியன், நிஜத்தில் ஹீரோ |
தெலுங்கில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் சலார் படத்தில் நாயகியாக நடித்து முடித்துள்ளார் ஸ்ருதிஹாசன். சோசியல் மீடியாவில் ரசிகர்களுடன் அவ்வப்போது உரையாடுவதை வழக்கமாக வைத்திருக்கும் ஸ்ருதிஹாசன் சமீபத்தில் ரசிகர்களுடன் உரையாடினார்.
அப்போது ஒரு ரசிகர் அவரிடத்தில், நீங்கள் வெர்ஜினா? என்று ஒரு கேள்வி கேட்டார். அதற்கு ஸ்ருதிஹாசன் எந்த பதிலும் கொடுக்காமல், வெர்ஜின் என்பதற்கான ஸ்பெல்லிங் தவறாக உள்ளது. முதலில் வெர்ஜினுக்கு சரியான ஸ்பெல்லிங் தெரிந்து கொள்ளுங்கள் என்று அவருக்கு ஒரு பதில் கொடுத்துள்ளார்.
அதையடுத்து நீங்கள் மது குடிப்பீர்களா? உங்களுக்கு பிடித்த மதுபானம் எது? என்று கேட்ட கேள்விக்கு, ‛‛கடந்த ஆறு ஆண்டுகளாக நான் எந்த மது பானத்தையும் தொடுவதில்லை. என்றாலும் சில நேரங்களில் ஆல்கஹால் இல்லாத பீர் வகையை மட்டுமே எடுத்து வருகிறேன்'' என்று தெரிவித்துள்ளார் ஸ்ருதிஹாசன்.
மற்றொருவர், ‛‛என்னை திருமணம் செய்து கொள்கிறீர்களா...'' என கேட்க அதற்கு மறுப்பு சொன்ன ஸ்ருதி, அருகில் உள்ள தனது காதலர் சாந்தனு ஹசரிகாவை வீடியோவில் காண்பித்துள்ளார்.