வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா ராய், அபிஷேக் பச்சன் | கை கோர்ப்போம் துயர் துடைப்போம் : நடிகர் விஜய் அறிவுறுத்தல் | வெள்ளத்தில் சிக்கிய நடிகை நமீதா, குழந்தைகளுடன் பத்திரமாக மீட்பு | அலட்சியம், பேராசை, தவறான நிர்வாகம் - சந்தோஷ் நாராயணன் | புது தொடரில் என்ட்ரி கொடுக்கும் ஷெரின் ஜானு | சென்னை பெருவெள்ளத்தில் சிக்கி தவித்த கனிகா மீட்பு | தி கேர்ள் பிரண்ட் படப்பிடிப்பில் இணைந்த ராஷ்மிகா | பைட்டர் படத்திலிருந்து ஹிர்த்திக் போஸ்டர் வெளியானது | ஸ்டார் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் இதோ | ஹாய் நான்னா படக்குழு புதிய முயற்சி |
வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க 'வாடிவாசல்' படம் தயாராகும் என 2021ம் ஆண்டே அறிவிக்கப்பட்டது. அந்த ஆண்டில் படத்தின் டைட்டில் போஸ்டரையும் வெளியிட்டார்கள். அப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு வருடங்களாகியும் இன்னும் ஆரம்பமாகாமல் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது.
கடந்த வருடம் இப்படத்திற்கான டெஸ்ட் ஷுட்களைக் கூட நடத்தினார்கள். படத்திற்காக ஜல்லிக்கட்டு காளை ஒன்றை சூர்யா சொந்தமாக வாங்கி வளர்க்கிறார் என்றும் தகவல் வெளியானது. ஆனால், கடந்த இரண்டு வருடங்களாக வெற்றிமாறன் 'விடுதலை' படத்திற்காக மட்டுமே பணிபுரிந்து வந்தார். அப்படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது.
நேற்று அப்படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. அப்போது பேசிய வெற்றிமாறன், 'விடுதலை படத்தின் இரண்டு பாகங்கள் வெளியானதும் 'வாடிவாசல்' படத்தை ஆரம்பிக்க உள்ளோம். அதற்குப் பிறகு 'வட சென்னை 2' படத்தை இயக்குவேன்,” என அறிவித்தார்.
மார்ச் மாதம் 30ம் தேதி 'விடுதலை' படத்தின் முதல் பாகம் வெளியாக உள்ளது. அதற்குப் பின் ஆறு மாதங்கள் கழித்து இரண்டாம் பாகம் வெளியாகலாம். எப்படியும் இந்த வருட இறுதிக்குள் 'வாடிவாசல்' ஆரம்பமாக வாய்ப்புள்ளது. படம், இரண்டு வருடங்களாகியும் ஆரம்பமாகாமல் இருப்பதால் புதிய அப்டேட்டைக் கேட்டு சூர்யா ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளார்கள்.