தமிழில் அடுத்தடுத்து அறிமுகமாகும் மலையாள நடிகர்கள் | தென்னிந்திய ரசிகர்களை குறை சொல்லும் சல்மான் கான் | ராஷ்மிகாவின் வாழ்நாள் பயம் இதுதான் | ரசிகரின் தந்திர கேள்வியும்... சமந்தாவின் சாதுர்ய பதிலும்...! | துல்கர் சல்மானை துப்பாக்கி முனையில் விரட்டிய வீட்டு உரிமையாளர் | மகளை பாடகி ஆக்கிய பிரித்விராஜ் | எம்புரான் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவி, சல்மான் கான்? : இயக்குனர் பிரித்விராஜ் பதில் | எல் 2 எம்புரான் - முதல் நாள் வசூல் எவ்வளவு? | 40 வயதைக் கடந்தும் திருமணத்தைத் தள்ளி வைக்கும் நடிகர்கள் | வீர தீர சூரன் முதல் நாள் வசூல் |
1989ம் ஆண்டு பார்த்திபன் இயக்கி, நடித்து வெளியான படம் ‛புதிய பாதை'. திரையுலகில் பார்த்திபனுக்கு புதிய அடையாளத்தையும், புதிய பாதையையும் ஏற்படுத்தி தந்த படம் இது. 34 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி நடிக்கப் போகிறார் பார்த்திபன்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛புதிய பாதை படம் எப்போதுமே என் மனதுக்கு மிகவும் அருகில் இருக்கும் ஒரு படமாகும். அதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி, நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். நவீன டெக்னாலஜியை பயன்படுத்தி இந்த படத்தை வித்தியாசமான பாணியில் இயக்கப் போகிறேன். அதையடுத்து தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார் நடிகர் தியாகராஜ பாகவதரின் படத்தை இயக்குவதற்காக ஆய்வு செய்து கொண்டிருக்கிறேன். தியாகராஜ பாகவதர், லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சிக்கி சிறை சென்ற நிலையில் அந்த கொலை வழக்கு குறித்து தற்போது ஆய்வு செய்து வருகிறேன். இது குறித்த முழு தகவல்களை திரட்டியதும் அந்த படத்தை தொடங்குவேன். அதற்காக சில ஆண்டுகள் ஆகலாம்'' என்று தெரிவித்திருக்கிறார் பார்த்திபன்.