பிரபாஸ் படத்திலிருந்து நீக்கப்பட்டாரா ராஷ்மிகா? | விஜய் சேதுபதி படத்தில் தபு : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | கண்ணப்பா படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'ரெட்ரோ'வில் 90களின் காதல் கதை : கார்த்திக் சுப்பராஜ் தகவல் | பிளாஷ்பேக் : இளையராஜாவின் பாடலுக்காக உருவான படம் | சினிமா சங்கப் பிரச்னைகளில் அரசு தலையிட வேண்டும் : ஆர்கே செல்வமணி கோரிக்கை | உறுதியானது 'லியோ - குட் பேட் அக்லி' ஒற்றுமை | தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி : மாறிய தயாரிப்பு நிறுவனம் | ஷங்கர் வழியில் எக்ஸ் தளத்தை 'ஆப்' செய்த ஏஆர் முருகதாஸ் | ஆளே இல்லாத வீட்டிற்கு ஒரு லட்சம் கரண்ட் பில் : கங்கனா ஏற்படுத்திய பரபரப்பு |
சென்னை கேளம்பாக்கத்தில் வசித்துவருபவர் பிரபல நடிகை அல்போன்சாவின் தங்கை ஷோபா (46). இவர் வளசரவாக்கத்தில் வேலைவாய்ப்பு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன்மூலம் மலேசியா, சிங்கப்பூர், துபாய், கனடா உள்ளிட்ட நாடுகளில் வேலை செய்ய ஆட்கள் தேவை என சில மாதங்களுக்கு முன்பு விளம்பரம் செய்துள்ளார். இதனையடுத்து பலரும் வேலைத்தேடி ஷோபாவின் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அவர்களில் 17 பேர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இன்டர்வியூ நடத்தப்பட்டிருக்கிறது.
அவர்களிடம் இருந்து ஷோபா சுமார் ரூ.74 லட்சம் பணம் பெற்றதாக கூறப்படுகிறது. இன்டர்வியூவில் தேர்வானவர்களிடம் பணி நியமன ஆணையும் அளிக்கப்பட்டுள்ளது. அதனை ஆய்வு செய்ததில் போலி பணி நியமன ஆணை என்பதை அறிந்து தேர்வானவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் ஷோபாவிடம் விளக்கம் கேட்க சென்றபோது, அவர் தலைமறைவாகிவிட்டார். இதனால் அவர்கள் அனைவரும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகாரளித்தனர். அதன்பேரில் நடவடிக்கை எடுக்கும்படி போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை மத்திய குற்றப்பிரிவின் வேலைவாய்ப்பு மோசடி தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டார். இந்த நிலையில் தலைமறைவாக இருந்த ஷோபாவை போலீசார் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவரை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.