ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
பெரும் வரவேற்பை பெற்ற 'வதந்தி' வெப் தொடரில் நாயகியாக நடித்தவர் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி. வெலோனி என்ற கேரக்டரில் நடித்து புகழ்பெற்றார். தற்போது சஞ்சனா 'லப்பர் பந்து' என்ற படத்தின் மூலம் சினிமா ஹீரோயின் ஆகியிருக்கிறார். இந்த படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் லக்க்ஷ்மன் குமார் தயாரிக்கிறர். ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். சுவாசிகா விஜய் இன்னொரு நாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர காளி வெங்கட், தேவதர்ஷினி உள்ளிட்ட பல இந்த படத்தில் நடிக்கின்றனர்.
கனா, நெஞ்சுக்கு நீதி உள்ளிட்ட படங்களின் ரைட்டரும், எப்ஐஆர் போன்ற படங்களின் இணை இயக்குனருமான தமிழரசன் பச்சமுத்து இப்படத்தை இயக்கவுள்ளார். லவ் டுடே படத்திற்கு ஒளிப்பதிவு செய்த தினேஷ் புருஷோத்தமன் ஒளிப்பதிவை கவனிக்கிறார். ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். நேற்று பூஜையுடன் படத்தின் பணிகள் தொடங்கியது. இம்மாத இறுதியில் படப்பிடிப்பு தொடங்கி நடைபெற இருக்கிறது.