'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
டி.ராஜேந்தர் இயக்கத்தில் 1984ம் ஆண்டு வெளிவந்த 'உறவைக் காத்த கிளி' படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ஜீவிதா. தொடர்ந்து 'செல்வி, நானே ராஜா நானே மந்திரி, இளமை, இது எங்கள் ராஜ்ஜியம், ஆயிரம் கண்ணுடையாள், பாடும் பறவைகள், சோறு, தர்மபத்தினி, ராஜ மரியாதை, ஏட்டிக்கு போட்டி, இனி ஒரு சுதந்திரம், தப்புக்கணக்கு” உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். தெலுங்கில் அறிமுகமாகி அங்கும் சில படங்களில் நடித்து பிரபலமானார்.
நடிகர் டாக்டர் ராஜசேகரைக் காதல் திருமணம் செய்து கொண்டபின் சினிமாவில் நடிப்பதை முழுமையாக நிறுத்தினார். பத்து ஆண்டுகளுக்குப் பிறகு தமிழில் பெரும் வரவேற்பைப் பெற்ற 'சேது' படத்தை தெலுங்கில் 'சேஷு' என்ற பெயரில் ரீமேக் செய்து இயக்குனராக அறிமுகமானார். தொடர்ந்து படங்களை இயக்கியும், தயாரித்தும் வந்தார்.
தமிழில் கடைசியாக 1988ல் வெளிவந்த 'வளைகாப்பு' என்ற படத்தில் நடித்தார். அதற்குப் பின் 34 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது 'லால் சலாம்' படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பில் மார்ச் 7 முதல் ஜீவிதா கலந்து கொண்டு நடிக்க இருக்கிறார். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க, விஷ்ணு விஷால், விக்ராந்த் கதாநாயகர்களாக நடிக்கிறார்கள். படத்தில் ரஜினிகாந்த்தின் தங்கையாக முக்கிய கதாபாத்திரத்தில் ஜீவி நடிக்க இருக்கிறாராம்.