மலையாளத்தில் வசூல் நம்பர் 1 இடத்தைப் பிடித்த 'எல் 2 எம்புரான்' | சினிமா டிக்கெட் : உள்ளாட்சி கேளிக்கை வரி குறைக்க அரசு முடிவு ? | கூலி, இட்லி கடை - ஏட்டிக்குப் போட்டியான அறிவிப்பா? | ஆண்கள் மட்டும்தான் லுங்கி அணிய வேண்டுமா ? | கேத்ரின் தெரசாவின் பனி | இறுதி கட்டத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் படம் | பிளாஷ்பேக்: எம்.ஜி.ஆர் நடிக்க விரும்பிய படத்தில் நடித்த ரஜினி | பிளாஷ்பேக்: ஒரே கதையை படமாக்க போட்டிபோட்ட தயாரிப்பாளர்கள் | 'விடாமுயற்சி' செய்யாததை செய்த 'குட் பேட் அக்லி' | இந்த வாரம் ஓடிடி-யில் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி? |
நெல்சன் இயக்கத்தில் ‛ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இதில் தமன்னா, சிவராஜ் குமார், யோகிபாபு, சுனில் உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இதையடுத்து ரஜினியின் அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
லைகா நிறுவனத்திற்கு ரஜினி இரண்டு படங்களில் நடிக்க உள்ளார். அதில் ஒன்று அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியாகி சில மாதங்களுக்கு முன் பட பூஜையும் நடந்தது. விரைவில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. தற்போது ரஜினி ஹீரோவாக நடிக்கும் பட அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
ரஜினியின் 170வது படமாக உருவாகும் இதை ‛ஜெயம் பீம்' படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். லைகாவின் சுபாஸ்கரன் தயாரிக்கிறார். லைகா தயாரிப்பில் ரஜினி ஹீரோவாக நடிக்கும் 3வது படம் இதுவாகும்.
லைகா வெளியிட்ட செய்தியில், ‛‛சூப்பர் ஸ்டாரின் ஒவ்வொரு திரைப்பட வெளியிடும் ரசிகர்களுக்கு கொண்டாடும் திருவிழா தான். அவருடன் மீண்டும் இணைவதில் லைகா பெருமை கொள்கிறது. அனைவரின் வாழ்த்துகளுடன் 2024ல் மாபெரும் கொண்டாட்டத்திற்கு தயாராவோம்'' என தெரிவித்துள்ளனர்.