25வது நாளில் 'கருப்பு' : சூர்யாவின் பல வருடக் கனவு | பூரி ஜெகன்நாத் உருவாக்கியுள்ள பிராண்ட்: பிரமிக்கும் சம்யுக்தா | உடும்புபிடியில் அஜித் : இழந்தது பல கோடி | ஹைப்பர் லிங் ஜார்னரில் உருவாகும் 'தி ஒன்' | சலீம் குமார் இறுதி சடங்கில் யு டியூப்பர்கள் அட்டகாசம் : போலீஸ் எச்சரிக்கை | ஆர்த்தி ஜீவனாம்சத்திற்கு காலக்கெடு கேட்ட ரவி மோகன் வழக்கு தள்ளுபடி | பிளாஷ்பேக் : 2 தமிழ் படங்களில் மட்டும் நடித்த சத்யன் | ரூ.300 கோடி வசூலை தாண்டியது ‛பெத்தி' | ஒரே இயக்குனர்... ரூ.400 சம்பளம் டூ ஹீரோ: விஜய் சேதுபதி நெகிழ்ச்சி | ஜூன் 10ல் வெளியாகும் ‛மகுடம்' பட டீசர் |

மணிரத்னம் இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையமைப்பில், விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலரது நடிப்பில் உருவாகியுள்ள 'பொன்னியின் செல்வன்' படம் ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாகும் என ஏற்கெனவே அறிவித்திருந்தார்கள்.
இடையில் அவ்வப்போது இந்தப் படத்தின் வெளியீடு குறித்த சந்தேகங்களை சிலர் வெளியிட்டு வீண் குழப்பத்தை ஏற்படுத்தி வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக படக்குழுவினர் இப்போதே புரமோஷனை ஆரம்பித்துவிட்டனர்.
நேற்று விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி ஆகியோர் படம் பற்றிப் பேசிய ஒரு நிமிட முன்னோட்ட வீடியோ ஒன்றை வெளியிட்டனர். நேற்று வெளியான அந்த வீடியோவிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் மூலம் படம் பற்றிய எதிர்பார்ப்பு இப்போதே ஆரம்பமாகிவிட்டது. இந்த வருட கோடை விடுமுறையில் இப்படம் வெளியாவதால் முதல் பாகத்தை விடவும் அதிகமான வசூலைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.