சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் | மீண்டும் நடிக்க வந்த அர்ச்சனா ரவி |

தமிழில் இந்தியன் 2, ஜெயிலர், லியோ உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார் அனிருத். தெலுங்கில் ஏற்கனவே சில படங்களுக்கு இசையமைத்துள்ள அனிருத், ராஜமவுலியின் ஆர்ஆர்ஆர் படத்திலும் ஒரு பாடல் பின்னணி பாடி இருந்தார். அதையடுத்து ஜூனியர் என்டிஆர் நடிக்கும் 30வது படத்தில் இசையமைப்பாளராக கமிட்டாகி இருக்கும் அனிருத், தற்போது குஷி படத்தை அடுத்து விஜய் தேவரகொண்டா நடிக்கும் 12வது படத்திற்கு இசையமைக்கவும் ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தை நானி நடித்த ஜெர்சி என்ற படத்தை இயக்கிய கவுதம் தின்னனுரி இயக்குகிறார். அந்த படத்திற்கு அனிருத்தான் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் மீண்டும் இந்த படத்தில் அனிருத்துக்கு அவர் வாய்ப்பு அளித்திருக்கிறார். மேலும் இந்த படத்தில் முதன்முறையாக விஜய் தேவரகொண்ட போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். ஜூலை மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்க இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது.