ஆர்யாவின் ‛அனந்தன் காடு' | விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் |
பி வாசு இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, பிரபு, ஜோதிகா, நாசர், வடிவேலு உள்ளிட்டோர் நடித்து 2005ல் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் ‛சந்திரமுகி'. 18 ஆண்டுகளுக்கு பின் இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. பி வாசு இயக்க, ராகவா லாரன்ஸ், கங்கனா, வடிவேலு, ராதிகா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். லைகா நிறுவனம் தயாரிக்க, ஆர்ஆர்ஆர் புகழ் எம்எம் கீரவாணி இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட கலாட்டான போட்டோக்கள், வீடியோக்கள் ஏற்கனவே இதற்கு முன்பு வெளியாகின. இப்போது லாரன்ஸ், வடிவேலு குறும்புத்தனம் செய்தபடி ஒரு போட்டோவை வெளியிட்டு, ‛‛முழுசாக சந்திரமுகியாக மாறிய வடிவேலு, கட்டி அணைக்கும் ராகவா லாரன்ஸ்...!'' என குறிப்பிட்டு லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதோடு, சந்திரமுகி 2 படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.