மீண்டும் படப்பிடிப்பில் பவன் கல்யாண் | வெளிநாடுகளில் கமலின் விக்ரம் பட வசூலை முறியடித்த அமரன் | விஜய் கட்சியில் இணைந்த வாழை பட நடிகர் பொன்வேல் | 12 ஆயிரம் தியேட்டர்களில் 'புஷ்பா 2' ரிலீஸ் | சீன உளவாளியாக எஸ்.ஜே.சூர்யா | சீனாவில் 'மகாராஜா' முதல் நாள் வசூல் | நிர்வாணமாக நடித்தது ஏன் : திவ்யா பிரபா விளக்கம் | 'மஞ்சுமல் பாய்ஸ்' பட லாபம் மறைப்பு : நடிகர் சவுபின் சாஹிர் அலுவலகத்தில் ஐடி ரெய்டு | மோசடி புகார் : நடிகை தன்யாவின் சொத்து முடக்கம் | பிளாஷ்பேக் : ஹீரோவாக நடித்த டெல்லி கணேஷ் |
அமீர் இயக்கத்தில் 2007ல் வெளியான "பருத்தி வீரன்" படம் திரைக்கு வந்து இன்றுடன் 16 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. அப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான கார்த்தி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார்.
அவர் நடித்து கடந்த வருடம் வெளிவந்த "விருமன், சர்தார், பொன்னியின் செல்வன்" ஆகிய மூன்று படங்களும் வெற்றிப்படங்களாக அமைந்தன. சர்தார் 100 கோடி வசூலையும், பொன்னியின் செல்வன் 500 கோடி வசூலையும் கடந்தது. தற்போது 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி.
வாரிசு நடிகர்கள் சினிமாவில் அறிமுகம் ஆனாலும் திறமை இருந்தால் மட்டுமே நிலைத்து நிற்க முடியும். கடந்து 16 வருடங்களில் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை நிரூபித்துள்ளார் கார்த்தி.
இந்த வருடத்தில் அவர் நடித்து வரவுள்ள பொன்னியின் செல்வன் 2, ஜப்பான் படங்கள் மீது எதிர்பார்ப்பு அதிகம் உள்ளது. இன்று தனது 16வது வருடத்தை கொண்டாடி வரும் கார்த்திக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.