‛ஆனந்த ராகம்...' பாடிய பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார் | ஒரு பாடலுக்கு நடனம் : விஜய் படத்தை நிராகரித்த ஸ்ரீ லீலா | இயக்குனருடன் சண்டை : படப்பிடிப்பை நிறுத்திய சவுந்தர்யா ரஜினிகாந்த் | மலையாளத்தில் மட்டுமே வெளியான நிவின்பாலி படம் | மூன்று வாரம் முன்கூட்டியே ரிலீசாகும் மம்முட்டியின் டர்போ | 100 கிலோ எடை தூக்கிய ராஷ்மிகா மந்தனா | நடிகை பிரக்யா நக்ராவை திருமணம் செய்தாரா ஜெய்? | அஜித்தின் 53வது பிறந்தநாள் : பரிசாக பைக் வழங்கிய ஷாலினி | தனி வீடு வாங்கிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் | குக் வித் கோமாளியில் என்ட்ரி கொடுக்கும் அக்ஷய் கமல் |
"வழக்கு எண் படத்தில் நடித்த மனீஷா அடுத்து, "ஆதலால் காதல் செய்வீர் படத்தை பெரிய அளவில் எதிர்பார்க்கிறார். இதற்கிடையே, "ஜன்னல் ஓரம் என்ற படத்திலும் நடிக்கும் மனீஷா, "இந்த 2013ல் தமிழில் நானும் குறிப்பிடத்தக்க நடிகைகளில் ஒருவராகி விடுவேன் என்கிறார். "இதை சும்மா பேச்சுக்காக சொல்லவில்லை. நடித்து வரும் படங்களின் கதைகள் கொடுத்த நம்பிக்கைதான். அதோடு, அடுத்தடுத்து என்னிடம் கதை சொல்ல வருபவர்களும் முன்னணி இயக்குனர்களாக இருப்பதால், எனக்கான இடம் விரைவில் கிடைத்து விடும் என்று நினைக்கிறேன், கதாநாயகிகளுக்கு நடிப்பு மட்டுமின்றி, உடற்கட்டும் அவசியம் என்பதால், உடலை பேணிக்காக்கும் பயிற்சிகளையும் இடைவிடாமல் தொடர்ந்து வருகிறேன். நீச்சல், நடனம் போன்ற பயிற்சிகளை தினமும் செய்வது தான், நான் ஸ்லிம்மாக இருப்பதன் ரகசியம், என்கிறார்.