கமலின் 'விக்ரம்' பட வசூலை முறியடிக்குமா 'தக்லைப்'? | சூரி உடன் நடித்தது பெருமை : ஐஸ்வர்யா லட்சுமி | நினைத்து கூட பார்க்கவில்லை : அதிதி ஷங்கர் | ரெட்ரோ' வில் காட்சிகள் நீக்கம் : பாலிவுட் நடிகர் வருத்தம் | 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஹீரோவான நவீன் சந்திரா | இரு மொழி படம் இயக்கும் விஜய் மில்டன் | நாளை படப்பிடிப்புகள் நடக்கும் : தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு | பிளாஷ்பேக்: பாடலுக்காக திரைக்கதையை மாற்றிய கே.எஸ்.ரவிகுமார் | பிளாஷ்பேக் : மருங்காபுரி சிவபாக்கியத்தின் நூற்றாண்டு | பிளாஷ்பேக்: 'சிட்டாடெல்' ஆனந்தன் சினிமாவின் 'விஜயபுரி வீரன்' |
சின்னத்திரை நடிகையான ரச்சிதா மஹாலெட்சுமி தமிழ் தொலைக்காட்சிகளில் பல ஹிட் தொடர்களில் நடித்து புகழ் பெற்றவர். திரைப்பட வாய்ப்பின் காரணமாக சீரியலை விட்டு ஒதுங்க நினைத்த அவருக்கு அதன்பின் சரிவர வாய்ப்புகள் அமையவில்லை. இந்நிலையில் தான் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசனில் என்ட்ரி கொடுத்து மீண்டும் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதை வென்றார். பைக் ரைட் செய்வதில் அதிக விருப்பமுள்ள ரச்சிதா, ராயல் என்பீல்ட் கம்பெனியின் பைக் ஒன்றை சொந்தமாக வாங்கி வைத்திருக்கிறார். அதில் அடிக்கடி ரைட் செய்து போட்டோஷூட்களையும் வெளியிடுவது வழக்கம். தற்போது அந்த பைக்கில் ஏறி ஜாலியாக சுற்றித்திரியும் ரச்சிதா இரண்டு கைகளையும் விட்டு கெத்தாக பைக் ஓட்டி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவானது ரசிகர்களிடத்தில் லைக்ஸ்களை குவிக்கத் தொடங்கியுள்ளது. அதேசமயம் பிரபலங்கள் இப்படி செய்வது தவறான முன்னுதாரணம் என பலரும் கருத்தும் பதிவிட்டுள்ளனர்.