63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி |
மிர்ச்சி சிவா நடிப்பில் ‛காசேதான் கடவுளடா, சுமோ' ஆகிய படங்கள் உருவாகி ரிலீஸிற்கு தயாராக உள்ளன. இருப்பினும் சில காரணங்களால் இந்த படங்களின் வெளியீட்டில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கோல்மால், சலூன், சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் ஆகிய படங்களில் நடித்து வந்தார் சிவா. இவற்றில் சிங்கிள் சங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் படம் வெளியீட்டிற்கு தயாராகிவிட்டது.
விக்னேஷ் ஷா இயக்கத்தில் சிவா உடன் மேகா ஆகாஷ், அஞ்சு குரியன், ராஜேந்திரன் உள்ளிட்டோர் இந்த படத்தில் நடித்துள்ளனர். காமெடி கலந்த படமாக உருவாகி உள்ளது. வருகிற பிப்., 24ல் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் வித்தியாசமான போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது குறிப்பிடத்தக்கது.