கைதி பாணியில் உருவாகியுள்ள வீர தீர சூரன் | சினிமாவிலிருந்து ஓய்வு பெறும் பவன் கல்யாண்? | இளம் இயக்குனர்களுடன் ரஜினி திடீர் சந்திப்பு | ஐபிஎல் கிரிக்கெட்டில் அனிருத் கச்சேரி | பிளாஷ்பேக் : ஏகாதசி விரதத்தை பிரபலமாக்கிய படம் | துபாயில் அட்லி - அல்லு அர்ஜுன் தீவிர ஆலோசனை | வீர தீர சூரன் OTT-யில் வருமா? வராதா? | நெட்பிளிக்ஸிலும் வரவேற்பை பெற்ற "டிராகன்" | எல் 2 எம்புரான் - முதல் நாள் முன்பதிவிலும் சாதனை | ராஜமவுலி படத்தில் நடிப்பதை உறுதி செய்த பிருத்விராஜ் |
வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில், விஜய், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து பொங்கலுக்கு வெளிவந்த படம் 'வாரிசு'. ஜனவரி 11ம் தேதி வெளிவந்த அப்படத்திற்கான பத்திரிகையாளர் காட்சியை ஒரு நாள் முன்னதாக ஜனவரி 10ம் தேதி இரவே சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்றில் திரையிட்டனர். நெகட்டிவ்வான விமர்சனங்கள் அதிகம் வராமல் குடும்பத்துடன் பார்க்கலாம் என்ற விமர்சனம் வந்ததால் அந்தப் படம் பெரும் நஷ்டத்திலிருந்து தப்பித்தது.
அந்தப் படத்தின் தமிழக உரிமையை வாங்கி வெளியிட்டவர் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித்குமார். அவர் இப்போது தனுஷ் நடித்துள்ள 'வாத்தி' படத்தின் தமிழக உரிமையை வாங்கி வெளியிடுகிறார். நாளை அப்படம் வெளியாக உள்ள நிலையில் 'வாரிசு' படத்தைப் போலவே இன்று இரவே சென்னையில் உள்ள பிரபல தியேட்டர் ஒன்றில் பத்திரிகையாளர் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்கள். ஆனால், 'வாரிசு' படம் போல குடும்பத்தினருடன் பார்க்க அனுமதி இல்லை, பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என கட்டுப்பாடு விதித்துவிட்டார்கள்.
'வாரிசு, வாத்தி' இரண்டு படங்களின் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் தெலுங்கு திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள். இரண்டு படங்களையும் தமிழில் ஒரே தயாரிப்பாளரே வாங்கி வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 'வாரிசு' வழியில் 'வாத்தி' செல்கிறார், என்ன நடக்கப் போகிறது என்பது நாளைக்குத் தெரிந்துவிடும்.