'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்கு நடிகரும், ஒருங்கிணைந்த ஆந்திரா மாநிலத்தின் முன்னாள் முதல்வருமாக இருந்தவர் மறைந்த என்டி ராமராவ். தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார் என்டிஆர் என அழைக்கப்படும் என்டி ராமராவ்.
1923ம் ஆண்டு மே மாதம் 28ம் தேதி பிறந்த என்டிஆரின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் தற்போது நடைபெற்று வருகிறது. அதை முன்னிட்டு அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயம் ஒன்றை வெளியிட உள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அறிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்டிஆரின் மகள் புரந்தேஸ்வரியைச் சந்தித்து மாதிரி நாயணத்தை வழங்கியுள்ளார்கள். வெள்ளியில் உருவாக உள்ள அந்த நாணயத்தின் ஒரு பக்கம் என்டிஆரின் முகம் பொறிக்கப்பட உள்ளது. என்டிஆருக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்பட உள்ள இந்த அங்கீகாரத்திற்கு அவரது ரசிகர்களும், தெலுங்கு தேசக் கட்சியின் தொண்டர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.