குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஆன எம்எஸ் தோனி தற்போது தோனி என்டர்டெயின்மென்ட் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்துள்ளார். அவரது முதல் தயாரிப்பாக தமிழ்ப் படம் ஒன்றைத்தான் தயாரிக்கிறார்.
'லெட்ஸ் கெட் மேரீட்' என்ற அந்த தமிழ்ப் படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்றது. ஹரிஷ் கல்யாண், இவானா, நதியா, யோகிபாபு மற்றும் பலர் நடிக்கும் ரமேஷ் தமிழ்மணி இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பில் தற்போது யோகி பாபு கலந்து கொண்டு நடித்து வருகிறார்.
சினிமா படப்பிடிப்பின் போது ஓய்வு நேரங்களில் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்திருப்பவர் யோகி பாபு. அவர் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் படித்த போது பள்ளி கிரிக்கெட் அணியின் வீரராக இருந்துள்ளார். அவர்களது அணி மாநில அளவிலான சாம்பியன் பட்டத்தையும் வென்றுள்ளது குறிப்பிட வேண்டிய ஒன்று.
யோகி பாபுவின் கிரிக்கெட் ஆர்வத்திற்காக அவருக்கு தான் பயிற்சியின் போது பயன்படுத்திய கிரிக்கெட் பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார் தோனி. அந்த பேட் உடன் வீடியோ ஒன்றைப் பகிர்ந்து தோனிக்கு நன்றி தெரிவித்துள்ளார் யோகி பாபு.