ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
''மதராசப்பட்டிணம், ஐ, தெறி, 2,0” உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆங்கிலோ நடிகையான எமி ஜாக்சன். தற்போது விஜய் இயக்கத்தில், அருண் விஜய் கதாநாயகனாக நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
எமி ஜாக்சன் இதற்கு முன்பு ஜார்ஜ் பனயட்டியோ என்பவரைக் காதலித்து வந்தார். அவருடன் திருமண நிச்சயம் மட்டும் நடந்தது, ஆனால், திருமணம் நடக்கவில்லை. அவர் மூலமாக ஆண் குழந்தை ஒன்றிற்கும் தாயானார். அதன்பின் இருவரும் பிரிந்தனர். எமியின் ஆண் குழந்தைக்கு நான்கு வயதாகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக ஆங்கில நடிகரான எட் வெஸ்ட்விக் என்பவரைக் காதலித்து வருகிறார். நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு அந்தப் புதிய காதலருடன் 'ஏடாகூடமான' முத்தப் புகைப்படங்களையும், அவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களையும் பதிவிட்டுள்ளார். புது காதல் ஜோடிக்கு அவர்களுடைய நண்பர்கள் காதலர் தின வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்கள்.