ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது |
மீடியாக்களின் வருகை, குறிப்பாக யு-டியூப் சேனல்களின் ஆதிக்கம் பெருகிய பின்பு, தியேட்டர்களில் மிகப்பெரிய நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, படம் பார்த்துவிட்டு வரும் பார்வையாளர்களிடம் படம் குறித்த அவர்களது கருத்துக்களை, விமர்சனங்களை கேட்டு அவற்றை தங்களது சேனல்களில் ஒளிபரப்பி வருகின்றனர். இதனால் நல்ல படங்களுக்கு பிரச்சனை இல்லை. அதேசமயம் மிகவும் எதிர்பார்க்கப்படும் பல படங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் தவறான கோணத்தில் அந்த படத்தை பற்றி விமர்சனங்கள் வெளியாவதால் படத்தின் வசூல் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து கேரள தயாரிப்பாளர்கள் சங்கம் திரைப்பட உரிமையாளர்கள் சங்கத்திடம் பலமுறை வலியுறுத்தியுள்ளது.
இந்த நிலையில் தற்போது இதுபோன்ற மீடியாக்கள், யு-டியூப் சேனல்கள் தியேட்டருக்குள் நுழைந்து படம் பார்த்துவிட்டு வரும் ரசிகர்களிடம் கருத்து கேட்பதற்கு அதிரடியாக தடை விதித்துள்ளது கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம். அதே சமயம் தியேட்டருக்கு வெளியே நின்று பொதுமக்களிடம் இதுபோன்ற சேனல்கள் கருத்து கேட்டால், அதில் நாங்கள் தலையிட முடியாது என்றும் கூறியுள்ளது. இந்த புதிய உத்தரவின் மூலம் இனிவரும் நாட்களில் படங்களின் வசூல் கூடுமா என்பது போகப் போகத்தான் தெரியும்.