'இந்தியன் 2' தீபாவளிக்கு வெளியிட திட்டம் | கீழடி தொல்லியல் அருங்காட்சியகத்தை பார்வையிட்ட சூர்யா குடும்பத்தினர் | 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் எப்படிப்பட்ட வரவேற்பு கிடைத்துள்ளது ? | இளையராஜாவை சந்தித்து நன்றி சொன்ன வெற்றிமாறன் | 'பத்து தல' வெற்றியைக் கொண்டாடிய படக்குழு | விடுதலை படக்குழுவினருக்கு தங்க நாணயம் தந்த வெற்றிமாறன் | பாலாவின் வணங்கான் அடுத்தகட்ட படப்பிடிப்பு திருவண்ணாமலையில் துவங்குகிறது | முகேஷ் அம்பானி வீட்டு கலாச்சார நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் | பாரதிராஜா நடிப்பில் மனோஜ் இயக்கும் மார்கழி திங்கள் | 'பத்து தல'யை தடுமாற வைக்கும் 'விடுதலை' |
“நான் காமெடியன்தான். என் மூஞ்சி காமெடிக்குத்தான் லாயக்கு” என்று யோகி பாபு அடிக்கடி சொல்லி வந்தாலும், அவரும் அடுத்தடுத்து கதையின் நாயகனாக நடித்துக் கொண்டுதான் இருக்கிறார். சமீபத்தில் அவர் கதை நாயகனாக நடித்த பொம்மை நாயகி வெளியானது. இந்த நிலையில் அடுத்து லக்கி மேன் என்ற படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
திங்க் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் பாலாஜி வேணுகோபால் இந்த படத்தை இயக்குகிறார். சந்தீப் கே.விஜய் ஒளிப்பதிவு செய்கிறார். ஷான் ரோல்டன் இசை அமைக்கிறார். ரேச்சல் ரெபேக்கா, அப்துல் லீ, ஆர்.எஸ். சிவாஜி, அமித் பார்கவ், சாத்விக் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
“லக்கி மேன் திரைப்படம் உண்மையான அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதைக் கண்டறியும் ஒரு மனிதனின் அதிர்ஷ்டத்தைப் பற்றி பேசுகிறது. அதிர்ஷ்டம் என்றால் என்ன, எந்த அளவிற்கு அது ஒருவனின் வாழ்க்கையில் வந்து சேர்கிறது என்பதையும் படத்தில் காட்டுகிறோம். சில சமயங்களில் நாம் விரும்புவது கிடைக்காமல் போவதும் ஒரு அற்புதமான அதிர்ஷ்டம். எனவே, யோகிபாபு உண்மையில் ஒரு லக்கி மேன்தானா என்பதை சொல்லும் படம்” என்கிறார் இயக்குனர் பாலாஜி.
கார்த்திக், சங்கவி, கவுண்டமணி, செந்தில், தியாகு, ராதாரவி, சில்க் ஸ்மிதா உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 1995ல் இதே தலைப்பில் ஒரு காமெடி படம் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.