அர்ஜுன் தாஸ் ஜோடியாக மமிதா பைஜூ? | திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த பவர் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தின் அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | விஜய் சேதுபதியை இயக்கும் துரை செந்தில்குமார் | படையப்பா... ஜெயிலர் 2... ரம்யா கிருஷ்ணன் பகிர்ந்து சுவாரஸ்யம் | அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' |
நயன்தாரா தான் நடிக்கும் படங்களின் புரமோசன் நிகழ்ச்சியில்கூட பங்கேற்பதில்லை. விருது விழாக்கள், தான் தயாரிக்கும் படங்களின் தனி நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்பார். முதன் முறையாக சென்னை புறநகரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றின் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: கல்லூரி வாழ்க்கை மிகவும் முக்கியமானது, மகிழ்ச்சி நிறைந்தது. இந்த காலத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்துக்கானது. இந்த சமயத்தில் நீங்கள் யாருடன் இருக்கிறீர்கள், யாருடன் பழகுகிறீர்கள் என்பது முக்கியமானது. இந்த நேரத்தில், நீங்கள் நல்ல நண்பர்களோடு பழக வேண்டும். நல்லவர்களை சேர்ந்து இருந்தால் உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். கெட்டவர்களோடு சேர்ந்தால், வாழ்க்கை வேறு மாதிரி சென்று விடும்.
கல்லூரி நாட்களில் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் உங்கள் எதிர்காலத்திற்கானது. படிப்பை முடித்துவிட்டு வெளியே செல்லும் போது, சிறந்த நபராக திறமையானவராக இருக்க வேண்டும். எவ்வளவு உயரத்திற்கு சென்றாலும், பணிவாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் நீங்கள் பணிவாக நடந்து கொள்ளும் போது, உங்கள் வாழ்க்கை இன்னும் அழகாக இருக்கும். உங்கள் பெற்றோருக்கும் நீங்கள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். தினமும் அவர்களுக்காக 10 நிமிடத்தையாவது ஒதுக்க வேண்டும், அதில் அவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சி உங்களுக்கு ஆசிர்வாதமாக மாறும்:
இவ்வாறு அவர் பேசினார்.