Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'உன்னோட நடந்தா' பாடல் அனுபவத்தைக் கூறும் சுகா

07 பிப், 2023 - 12:45 IST
எழுத்தின் அளவு:
Director-Suka-about-Onnoda-Nadandhaa-song-experience

வெற்றிமாறன் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், சூரி, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்கும் 'விடுதலை' படத்தின் முதல் சிங்கிளான 'உன்னோட நடந்தா' பாடல் நாளை பிப்ரவரி 8ம் தேதி வெளியாக உள்ளது. இப்பாடலை எழுத்தாளரும் திரைப்பட இயக்குனருமான சுகா எழுதியுள்ளார். சுகா, வெற்றிமாறன் ஆகியோர் மறைந்த இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனர்களாகப் பணியாற்றியவர்கள்.

'உன்னோட நடந்தா' பாடல் எழுதிய அனுபவத்தைப் பற்றி சுகா அவரது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதாவது,

உன்னோட நடந்தா . . .

வெற்றி மாறன் அழைத்தான்.

'அண்ணே! உங்களை ஒருத்தர் பாக்கணுமாம். உடனே கிளம்பி வாங்க.'

'யாருடா?' அசட்டையாகக் கேட்டேன்.

சிரிப்பை அடக்கிக் கொண்டு பெரியவர் பேரைச் சொன்னான். அருகில் அவரது சிரிப்புச் சத்தம் கேட்டது.


'அடேய்' என்றபடி போனை வைத்துவிட்டு ஓடினேன்.

'இப்படி கூப்பிட்டாதான் வருவே இல்ல!?' என்றபடி வரவேற்றார்.

'விடுதலை' படத்திற்காக ஒரு பாடல் எழுத அழைக்கப்பட்டிருக்கிறேன் என்பது அப்போதுதான் தெரிந்தது.


'எனக்கு பாட்டு எழுதத் தெரியாதே ஸார்' என்றேன்.

'நீ எழுதுய்யா. அதுதான் பாட்டு'.

வெற்றிமாறனைத் தனியாக அழைத்து சூழல் என்னவென்று கேட்டேன். அப்போதுதான் அவன் கூடுதலாக இந்தத் தகவலைச் சொன்னான்.

'சுகாவைக் கூப்பிடுவோம். மாட்டேன்னுதான் சொல்லுவான். ஆனா எழுத வச்சுடலாம். இளையராஜா வெற்றிமாறன் சுகான்னு நம்ம பேமிலி நேம்ஸ் இருந்தா நல்லா இருக்கும்' என்றாராம், பெரியவர்.

'பேப்பரும், பேனாவும் குடுடா' என்று வெற்றியிடம் கேட்டு வாங்கிக் கொண்டு பெரியவர் முன் அமர்ந்து சில வரிகள் எழுதிக் கொடுத்தேன்.

'ஓ ! Phrases ஆ எழுதிட்டியா?'

'ஆமா ஸார். எனக்கு இப்படித்தான் எழுத வருது. நீங்கதான் இதைப் பாட்டா மாத்திக்கணும்'.

மாற்றினார். பாடினார். அதற்குப் பிறகு தனுஷைப் பாட வைத்தார். வணங்கினேன். விடைபெற்றுக் கொண்டேன். நாளை பாடல் வெளியீடு.

எனக் குறிப்பிட்டுள்ளார்.

இளையராஜா இசையில் தனுஷ் பாடும் இந்தப் பாடல் வெளியீட்டிற்கு முன்பாகவே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ரஜினி படங்கள், கின்னஸ் சாதனை படத்தை எடுத்த தயாரிப்பாளர் காலமானார்ரஜினி படங்கள், கின்னஸ் சாதனை படத்தை ... பணிவாக இருங்கள், பெற்றோருக்கு முக்கியத்துவம் கொடுங்க : மாணவர்களுக்கு நயன்தாரா அட்வைஸ் பணிவாக இருங்கள், பெற்றோருக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ponnayan - tirunelveli,இந்தியா
07 பிப், 2023 - 17:56 Report Abuse
ponnayan சுகா அண்ணனின் எழுத்து சாமானியனின் முகமாக இருக்கும் ...வெற்றி பெற பிரார்த்திக்கிறேன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in