நீதிமன்றத்தில் நியாயம் கேட்கும் நாய் | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் வாள் சண்டை போட்ட நடிகை | பிளாஷ்பேக் : எம்.ஜி.ஆருடன் மவுன யுத்தம் நடத்திய ஏ.எல்.சீனிவாசன் | ''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் |
ரஜினி நடித்த ‛காளி, கர்ஜனை', கின்னஸில் இடம் பெற்ற ‛சுயம்வரம்' படங்களை எடுத்த தயாரிப்பாளர் ஹேம்நாத் பாபுஜி (76) உடல்நலக் குறைவால் காலமானார். உடல்நலம் பாதிக்கப்பட்டு சென்னை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர் சிகிச்சை பலன் இன்றி இன்று(பிப்., 7) காலை உயிரிழந்தார்.
ரஜினி நடித்த காளி, கர்ஜனை படங்களை தயாரித்தவர் கிரிதாரிலால் நாக்பால் என்றழைக்கப்படும் ஹேம்நாத் பாபுஜி. தென்னிந்திய திரைப்படம், டிவி தயாரிப்பாளர் சங்கம் எனப்படும் கில்டு அமைப்பின் தலைவராகவும் இவர் பதவி வகித்துள்ளார். மேலும் 14 இயக்குனர்கள் முன்னணி நடிகர்கள் நடித்து 24 மணிநேரத்தில் உருவாகி கின்னஸ் சாதனை படைத்த ‛சுயம்வரம்' படத்தையும் இவர் தான் தயாரித்தார் என்ற பெருமைக்குரியவர். மேலும் பல்வேறு படங்களில் குணச்சித்ர வேடங்களிலும் இவர் நடித்துள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கம் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இவர் வசித்து வந்தார். உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று காலை அவரது உயிர் பிரிந்தது.
கடந்த சில நாட்களில் கே விஸ்வநாத், வாணி ஜெயராம், டிபி கஜேந்திரன் ஆகியோர் மறைந்த நிலையில் இன்று இவரின் மறைவு திரையுலகினர் இடையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.