பிரித்விராஜூக்கு தாத்தாவாக நடிக்கும் மோகன்லால் | ஜப்பானில் ரசிகர்களுடன் பாகுபலி தி எபிக் படத்தை பார்த்து ரசித்த பிரபாஸ் | வருட இறுதியில் நிவின்பாலிக்கு டபுள் ஜாக்பாட் | பார்த்தால் பசிதீரும், ஒரு அடார் லவ், சிவாஜி : ஞாயிறு திரைப்படங்கள் | 2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் |

தனுஷ் நடித்துள்ள வாத்தி படத்தின் இசை விழா நடைபெற்றதை அடுத்து, சிம்பு, கவுதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள பத்து தல படத்தின் இசை வெளியீடு வருகிற 18ம் தேதி நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மார்ச் 30ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தை கிருஷ்ணா இயக்கியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்த படத்தின் இசை விழாவை பிரமாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. அதோடு இந்த விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் சில பாடல்களை பாட உள்ளார். இந்த இசை விழாவில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொள்ள இருக்கும் நிலையில், தற்போது தாய்லாந்தில் இருக்கும் சிம்பு இந்த படத்தின் இசை விழாவிற்காக சென்னை திரும்ப இருக்கிறார்.