வலைதளங்களில் வைரலான அஜித்தின் லேட்டஸ்ட் வீடியோ | பழசை மறக்காத சூரி | ஹேக் செய்யப்பட்ட திரிஷாவின் எக்ஸ் கணக்கு | இரண்டு பாகங்களாக உருவாகும் கார்த்தியின் 29வது படம்! | ஆண் குழந்தை தான் வாரிசுக்கு அடையாளமா... சீரஞ்சீவி பேச்சால் சர்ச்சை | 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' இசை வெளியீட்டு விழாவை தனுஷ் புறக்கணித்தது ஏன்? | நான் காப்பி ரைட்ஸ் கேட்க மாட்டேன் - இசையமைப்பாளர் தேவா | பவதாரிணி பிறந்தநாள்: வெங்கட்பிரபு உருக்கம் | பிளாஷ்பேக்: இளையராஜா இசை, தயாரிப்பில் சறுக்கிய திரைப்படம் | 10 ஆண்டுகளுக்கு முன்பே உருவான கதை 'டிராகன்' |
பிக்பாஸ் தமிழ் சீசன் 6 சமீபத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் 100நாளை நெருங்கிய இவர் பணப்பெட்டி டாஸ்க்கில் வெளியேறினார். வெளியே வந்தபின் கதிர் என்ன செய்கிறார் என்பது யாருக்கும் தெரியாமலிலிருந்தது. இந்நிலையில், ஊடகங்களில் தற்போது பேட்டி தர ஆரம்பித்துள்ள கதிர், பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு சூழலுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ள சிறிது காலம் தேவைப்பட்டது என்று கூறியுள்ளார். அப்போது பிக்பாஸ் டைட்டில் சர்ச்சை குறித்து பேசும்போது 'அசீமிற்கு மக்கள் அனைவரும் ஓட்டு போட்டதால் தான் வெற்றி பெற்றார். எனவே, அவரை எதுவும் சொல்ல முடியாது. ஆனால், ஷிவின் வெற்றி பெற்றிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அவர் வெற்றியை அனைவருமே சேர்ந்து கொண்டாடி இருக்கலாம்' என கூறியுள்ளார். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பிறகு கதிர் முதன்முதலாக ஷிவின் குறித்து பேசியுள்ளார். இதை கதிர் மற்றும் ஷிவினின் ரசிகர்கள் ஷேர் செய்து வைரலாக்கி வருகின்றனர்.