பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
பிரபல சின்னத்திரை தொகுப்பாளினி திவ்யதர்ஷினி உலகம் முழுக்க டூர் அடித்து அதை தனது சோஷியல் மீடியாக்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இங்கிலாந்துக்கு டூர் சென்றுள்ள டிடி, உலகதரம் வாய்ந்த ஆக்ஸ்போர்டு யுனிவெர்சிட்டி முன் நின்றுகொண்டு அட்வைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ஆக்ஸ்போர்ட் யுனிவெர்சிட்டியின் பெருமைகளை கூறி அங்கு நின்றுகொண்டிருப்பதை நினைத்து மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார். மேலும், தான் சிறுவயதில் ஆக்ஸ்போர்ட் யுனிவெர்சிட்டியில் படிக்க வேண்டும் என்று ஆசைபட்டதாகவும், ஆனால், என்னால் முடியவில்லை என்றும் கூறியுள்ளார். எனவே, 'படிக்காதான் முடியல அட்வைஸாச்சும் பண்ணுவோமே' என்கிற ஏக்கத்தில் வாய்ப்பு கிடைக்கும் மாணவர்கள் கண்டிப்பாக இங்கே வந்து படியுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.