'கர' படத்தில் வில்லத்தனம் கலந்த தனுஷ் | பராசக்தி படத்தில் விஜய் தேவரகொண்டா நடிக்க வேண்டியது : சுதா | சுந்தர் சி, விஷால் படத்திற்கு ‛புருஷன்' என தலைப்பு | ரூ. 31 கோடி வசூலைக் கடந்த சிறை : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | சிறிய நடிகருக்கு சம்பள பாக்கியை வைத்த ‛ஒய் நாட் ஸ்டுடியோஸ்' | சாய் பல்லவியைப் பாராட்டிய அமீர்கான் | ‛காந்தாரா' நாயகி சப்தமி கவுடாவின் படம் தமிழிலும் ரிலீஸாகிறது | டிக்கெட் முன்பதிவில் 1.5 கோடி வசூலித்த மங்காத்தா | பவன் கல்யாண் ஒரு நாள் இந்தியாவின் பிரதமராவார் : சொல்கிறார் நடிகை நித்தி அகர்வால் | அருள்நிதி கையில் 3 படங்கள் : இந்த ஆண்டு அடுத்தடுத்து ரிலீஸ் |

சின்னத்திரை நடிகரான சிபு சூரியன் ஜா தொடரில் நடித்திருந்தார். 1300 எபிசோடுகளை தாண்டி சூப்பர் ஹிட்டா இந்த தொடரில் ஹீரோவாக நடித்த சிபு சூரியனுக்கும், ஹீரோயின் நல்கார் ப்ரியங்காவுக்கும் ரசிகர்கள் அதிகம் கிடைத்தனர். டிஆர்பியில் ரோஜா தொடருக்கு அதிகம் டப் கொடுத்த சீரியல் என்றால் அது விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா தான். இரண்டும் மாறி மாறி முதலிடத்தை பிடித்து வந்தன. ஒருக்கட்டத்தில் புதிய சீரியல்கள் வரவால் இரண்டு சீரியல்களுக்கும் மவுசு குறைந்தது. இதனையடுத்து ரோஜா சீரியல் சில மாதங்களுக்கு முன் முடிந்தது. பாரதி கண்ணம்மாவுக்கும் கடந்த பிப்ரவரி 4 ஆம் தேதியுடன் எண்ட் கார்டு போட்டாகிவிட்டது.
இந்நிலையில், நடிகர் சிபு சூரியன் 'பாரதி கண்ணம்மா' சீசன் 2 வில் ஹீரோவாக கமிட்டாகியுள்ள செய்தி ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது. பாரதி கண்ணம்மா சீசன் 2 புரோமோ அண்மையில் வெளியாகிய நிலையில் அதில் சிபு சூரியனை பார்த்த பலரும் 'அர்ஜூன் இஸ் பேக்' என கமெண்ட் செய்து வருகின்றனர். போட்டியாக இருந்த சேனலில், அதுவும் போட்டியாக இருந்த சீரியலின் இரண்டாம் பாகத்திலேயே சிபு சூரியன் ஹீரோவாக கமிட்டாகியிருக்கிறார் என பலரும் அவரை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர். பாரதி கண்ணம்மா சீசன் வருகிற திங்கள் முதல் (பிப்ரவரி 6) ஒளிபரப்பாகவுள்ளது.