2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

மலையாள குணசித்தர நடிகர் ஜோஜூ ஜார்ஜ். ஜோசப், சார்லி, நாயாட்டு, ஆக்ஷன் ஹீரோ பிஜூ, மதுரம், ஒரு செகண்ட் கிளாஸ் யாத்ரா, நஜன் மாரிக்குட்டி, ஜூன் உள்பட ஏராளமான படங்களில் நடித்தவர். தமிழில் ஜெகமே தந்திரம் படத்தில் வில்லனாக நடித்தார்.
இந்த நிலையில் ஜோஜூ ஜார்ஜ் இரட்ட என்ற படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இயக்குநர் ரோஹித் எம்ஜி.கிருஷ்ணன் இயக்கத்தில் அஞ்சலி, ஸ்ரீந்தா, ஆர்யா சலீம், ஸ்ரீகாந்த் முரளி, சாபு மோன், அபிராம், சரத் சபா, ஷெபின் பென்சன், ஸ்ரீஜா, ஜித்து அஷ்ரப் உள்ளிட்ட பலரும் இப்படத்தின் நடித்துள்ளனர். மார்ட்டின் பிரக்கத்துடன் இணைந்து ஜோஜூ ஜார்ஜ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைக்கிறார்.
இரட்டை பிறவிகளான சகோதரர்களில் ஒருவர் போலீசாகவும், மற்றொருவர் ரவுடியாகவும் இருப்பது மாதிரியான கதை. இதில் அஞ்சலி விதவையாக நடித்துள்ளார். சமீபத்தில் இதன் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.