விஜய் நடித்த 'உன்னை நினைத்து' காட்சிகளைப் பகிர்ந்த விக்ரமன் | ஜன.,10க்கு தள்ளிப்போகிறதா 'ஜனநாயகன்'? | 'அகண்டா 2' மாதிரி ஆகிடுமா ஜனநாயகன் | ஜனவரி 30ல் வெளியாகும் ஜீத்து ஜோசப் படம் | நஷ்டமடைந்த 'ஏஜென்ட்' பட தயாரிப்பாளர், வினியோகஸ்தர்களுக்கு அகில் கொடுத்த வாக்குறுதி | ஆயிரம் படங்களில் நடித்த மூத்த மலையாள நடிகர் காலமானார் | 'மன சங்கர வர பிரசாத் காரு' படத்தின் மெகா புரமோஷனில் சிரஞ்சீவி கலந்து கொள்வாரா? | மூன்று வருடங்களுக்குப் பிறகு விஜய் பட நடிகையிடம் மன்னிப்பு கேட்ட புஷ்பா நடிகை | மீண்டும் சந்தித்த 'படையப்பா' படை | திரைப்பட பாடலாக உருவான சீமானின் மேடை பாட்டு |

விஜய் நடித்த 'வாரிசு', அஜித் நடித்த 'துணிவு' இரண்டு படங்களும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ம் தேதியன்று ஒரேநாளில் ஏட்டிக்குப் போட்டியாக வெளியாகின. விடுமுறை நாட்கள் என்பதாலும் இரண்டு படங்களுக்கான விமர்சனங்கள் நெகட்டிவ்வாக அதிகம் வரவில்லை என்பதாலும் இரண்டுமே வசூல் ரீதியாக தப்பித்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரையிலும், வெளிநாடுகளைப் பொறுத்தவரையிலும் இரண்டு படங்களுமே லாபகரமான படங்களாக அமைந்துள்ளதாகச் சொல்கிறார்கள். வெளி மாநிலங்களில் 'துணிவு' படத்தின் வசூல் சரியாக அமையவில்லை. அதே சமயம் 'வாரிசு' படம் நன்றாக வசூலித்துள்ளது.
இரண்டு படங்களும் தற்போது கடைசி கட்ட ஓட்ட நாட்களில் உள்ளன. இந்த வாரம் பிப்ரவரி 3ம் தேதி பல புதிய படங்கள் வெளிவர உள்ளன. எனவே, 'வாரிசு, துணிவு' இரண்டு படங்களையும் வியாழக்கிழமையுடன் பெரும்பாலான தியேட்டர்களில் தூக்க உள்ளார்கள். சென்னை, கோவை உள்ளிட்ட சில மாநகரங்களில் மட்டும் சில தியேட்டர்களில் ஓட வாய்ப்புள்ளது. இந்த வாரத்துடன் இப்படங்களுக்கான உண்மையான வசூல் நிலவரம் என்ன என்பது சம்பந்தப்பட்டவர்களுக்குத் தெரிந்துவிடும்.